2026 October 11, Sunday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

உள்ளூர்April 27, 2026 · 6 months முன்4
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று யாழ்ப்பாண நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 240 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மேலும் எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் காணப்படுவதால் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், அதற்காக 08 வாரகால பகுதி தேவை என சட்ட வைத்திய அதிகாரி மன்றில் விண்ணப்பம் செய்ததற்கு அமைவாக மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45 நாட்கள் முன்னெடுக்கப்பட்டு , செப்டெம்பர் 06ஆம் திகதியுடன் நிறைவு பெற்ற நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் தற்போது சுமார் 08 மாத கால பகுதிக்கு பின்னர் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 2 கோடி 10 இலட்சம் ரூபாய் நிதி, நிதியமைச்சினால் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.