களுவாஞ்சிகுடி பொது சந்தையில் வெற்றிலை மென்று உமிழ்ந்தவருக்கு வந்த நிலை.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிகுடி பொது சந்தையில் பொது இடத்தில் வெற்றிலை மென்று உமிழ்ந்த நபர் ஒருவருக்கு எதிராக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனனால் 1883 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க தண்டனைகள் சட்டக்கோவை மூலம் வெள்ளிக்கிழமை(19.06.2026) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதன்போது இதில் குறித்த நபருக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன். 1500 ரூபா தண்டப்பணமும் நீதிமன்றினால் விதிக்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த.கஜனனர் தெரிவித்தார்.




