2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்! கைதிகள் கூரையில் ஏறி போராட்டம் – 2 பேர் உயிரிழப்பு, 35 பேர் காயம். Caption 2:

உள்ளூர்July 6, 2026 · 3 months முன்17
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்! கைதிகள் கூரையில் ஏறி போராட்டம் – 2 பேர் உயிரிழப்பு, 35 பேர் காயம்.  Caption 2:

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05) மதியம் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, அந்தச் சிறைச்சாலையின் பெண் வார்டில் இருந்த பெண் கைதிகள் குழுவொன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

சிறைச்சாலையின் கூரை மீது ஏறி அவர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

அதேபோல், சற்று நேரத்திற்கு முன்னரிலிருந்து ஆண் கைதிகள் குழுவொன்றும் சிறைச்சாலையின் கூரை மீது ஏறி போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே இன்று (05)  மதியம் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 35 பேர் இதுவரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இந்த மோதலில் இரு கைதிகள் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயமடைந்த மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

 

அத்துடன், காயமடைந்த கைதிகளில் மேலும் 10 பேருக்கு நீர்கொழும்பு வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 

ஏனைய காயமடைந்தவர்கள் அதே வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

 

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல் ஒன்றை காட்டிக்கொடுத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தற்போது சிறைச்சாலை வளாகத்தின் பாதுகாப்புக்காக பொலிஸாரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் (STF) அழைக்கப்பட்டுள்ளனர்.