2026 October 17, Saturday ⛅ கொழும்பு 24° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம்

உள்ளூர்April 17, 2026 · 6 months முன்4
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம்


முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை  சந்திரகாந்தன் அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக இன்று காலை மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அடையாள சத்தியாகிரகப் போராட்டம்  இடம் பெற்றது

சிறைச்சாலை ஆணையாளர் அவர்களே சந்திரகாந்தன் அவர்களை தகுதியான சிறைச்சாலைக்கு மாற்றுங்கள், கைதிகளும் மனிதர்களே சந்திரகாந்தன் அவர்களின் உண்ணாவிரத போராட்டத்திற்கு தீர்வு கொடுங்கள், சந்திரகாந்தன் அவர்களுக்கு தடுப்பு காவல் கைதிக்கான வசதிகளை வழங்க வேண்டும், இலங்கை நீதித்துறையை மதிக்கின்றோம் உண்ணாவிரத போராட்டத்திற்கு தீர்வு கொடுக்கவும் என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கருப்புப்பட்டி அணிந்து அமர்ந்தவாறும் அமைதியான முறையில் தங்களது அடையாள சத்தியாகிரக போராட்டத்தை முன்னெடுத்தனர்.

மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த அடையாள சத்யாக்கிரக போராட்டத்தில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சிறையில் சந்திரகாந்தனின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் அவருக்கு உரிய முறையில் சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளும் வழங்கப்படவில்லை எனவே சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகளை சரி வழங்க வேண்டும் எனவும், வேறு சிறைக்கு அவரை மாற்றி அவருக்கு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் எனவும் இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும் இருந்த ஒருவர் மக்களின் தேவைகளை நிறைவேற்றிய ஒருவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பிரதிநிதி இவ்வாறு ஒருவரை அடிப்படை கைதிகளுக்கு வழங்குகின்ற சலுகைகளை கூட வழங்காமல் வைத்திருப்பது வேதனை அளிப்பதாகவும் சரியான ஒரு தீர்வை ஜனாதிபதியும் சிறைச்சாலை ஆணையாளரும் வழங்க வேண்டும் எனவும் இதன் போது முன் வைக்கப்பட்டது.

இந்த அரசாங்கத்தின் செயல்பாடுகளை தாங்கள் வரவேற்பதாகவும் சட்டம் தன் கடமையை சரியாக செய்ய வேண்டும் எனவும் சந்திரகாந்தன் குற்றம் செய்திருந்தால் அவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும் எனவும் கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.