2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு-சந்தேக நபர் கைது

உள்ளூர்January 23, 2026 · 7 months முன்2
சட்டவிரோத மதுபானம் தயாரிப்பு-சந்தேக நபர் கைது

மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு சந்தேகநபர், மஸ்கெலியா பொலிஸாரால், உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் அடங்கிய குழு, குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்து, ஒன்றரை நாட்கள் அங்கேயே தங்கி கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான தயாரிப்பு இடத்தை முற்றுகையிட்டனர்.

இதன் போது, 210 லீட்டர் கசிப்பு அழிக்கப்பட்டதுடன், சந்தேகநபரால் தயாரிக்கப்பட்ட 1500 மில்லிலீட்டர் ஸ்பிரிட் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், குறித்த தோட்டத்திலேயே வசிக்கும் 69 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை பொலிஸ் பிணையில் விடுவித்து, அவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை காவல் ஆய்வாளர் புஷ்பகுமார தெரிவித்தார்.