2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 32°
LIVE
ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!

மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை

உள்ளூர்March 11, 2026 · 5 months முன்0
மின்சார ஊழியர்களுக்குக் கடும் எச்சரிக்கை

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் பிரகாரம், 2026 மார்ச் 09 ஆம் திகதி முதல் இலங்கை மின்சார சபையின் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக தனியார் நிறுவனங்களிடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா மற்றும் நெஷனல் ட்ரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்விஸ் ப்ரொவைடர் ஆகிய நிறுவனங்களின் முகாமைத்துவம் அனைத்து ஊழியர்களுக்கும் கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட அடிப்படைப் பகிர்வுத் திட்டத்தின்படி, அனைத்து மின்சார சபை ஊழியர்களும் உரிய 4 நிறுவனங்களுக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். தடையற்ற மின் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்காக அவர்கள் சட்டப்பூர்வமாகத் தமது கடமைகளை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளனர் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.