2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வாழ்க்கையை மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவும், தளராத உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் !

உள்ளூர்April 5, 2026 · 6 months முன்6
வாழ்க்கையை மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவும், தளராத உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் !

இயேசு கிறிஸ்து மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, இலங்கை வாழ் மற்றும் உலகவாழ் கிறிஸ்தவ மக்களுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், இருளை வென்று ஒளியையும், அச்சத்தை வென்று நம்பிக்கையையும் அடைய முடியும் என்பதே உயிர்த்தெழுந்த இயேசு பெருமான் உலகிற்கு வழங்கிய செய்தி என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“எந்தவொரு இருண்ட இரவும் நிரந்தரமானதல்ல. ஒவ்வொரு சவாலுக்குப் பின்னாலும் நம்பிக்கையின் விடியல் பிறக்கும் என்பதை ஈஸ்டர் செய்தி எமக்கு நினைவூட்டுகின்றது. வாழ்க்கையை மீண்டும் புதிதாக ஆரம்பிக்கவும், தளராத உறுதியுடன் முன்னோக்கிச் செல்லவும் இது எம்மை ஊக்குவிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் குறிப்பிட்ட பிரதமர், வெறுப்பு மற்றும் மோதல்களுக்குப் பதிலாகப் பேச்சுவார்த்தைகளும் புரிந்துணர்வும் மேலோங்கிய, போர் அச்சம் நீங்கிய அமைதியான உலகம் உதயமாக வேண்டும் எனத் தனது செய்தியில் பிரார்த்தித்துள்ளார்.