2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

BREAKINGஉள்ளூர்January 8, 2026 · 7 months முன்1
இலங்கையின் பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக வலுப்பெற்று, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கிழக்குக் கரையை வந்தடையும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அதிதீவிர மழை (100 மி.மீ மேல்): கிழக்கு மாகாணம் (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை) மற்றும் ஊவா மாகாணத்தில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும்.

பலத்த மழை (75 – 100 மி.மீ): வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மத்திய மாகாணத்தின் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குத் தொடர் மழை எதிர்பார்க்கப்படுகிறது.

மிதமான மழை (50 – 75 மி.மீ): வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.

வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம்: நாட்டிலுள்ள பிரதான குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 80% – 90% வரை உயர்ந்துள்ளதால், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள ஆற்றுப் படுக்கைகளை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட எச்சரித்துள்ளார். மேலும், மண்சரிவு அபாய வலயங்களில் உள்ள மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ள அவசர நிலைமைகளைச் சமாளிக்க முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன:

80 இராணுவக் குழுக்கள் மற்றும் கடற்படைப் படகுகள் தயார் நிலை.

விமானப்படை ஹெலிகொப்டர்கள்: வீரவில, பலாவி, இரத்மலானை உள்ளிட்ட 5 முக்கிய தளங்களில் தயார் நிலையில் உள்ளன.

பொலிஸார் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினர் மீட்புப் பணிகளுக்காக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.