2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

உள்ளூர்January 7, 2026 · 7 months முன்1
பல பகுதிகளுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சிவப்பு எச்சரிக்கை நாளை நண்பகல் 12 மணி வரை நீ டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரிவு மற்றும் நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பனை பிரதேச செயலக பிரிவுகளுக்கு இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

இதே நேரத்தில், தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நாளை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.