2026 October 12, Monday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 22° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

இலங்கை ரூபா டொலருக்கு எதிராக வலுவடைந்தது

உள்ளூர்May 24, 2026 · 5 months முன்4
இலங்கை ரூபா டொலருக்கு எதிராக வலுவடைந்தது


கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாவின் மதிப்பு, வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க டொலருக்கு நிகராக 2.7 வீதத்தால் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ‘Bloomberg’ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் ரூபா பதிவு செய்த மிகப்பெரிய ஒருநாள் வளர்ச்சியாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, அன்றைய தினம் ஆசியாவிலேயே மிகச் சிறந்த முறையில் செயல்பட்ட நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து இலங்கைக்கு நிதி கிடைக்கவுள்ள நிலையில், சந்தையிலுள்ளவர்கள் தங்களிடமுள்ள டொலர்களை விற்பனை செய்ய முற்பட்டதே ரூபா வலுவடைவதற்குக் காரணம் என அரசாங்கம் தெரிவிப்பதாக அந்த இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ரூபாவின் மதிப்பை ஸ்திரப்படுத்துவதற்காகத் தனிப்பட்ட வாகன இறக்குமதியின் மீது கூடுதல் கட்டணத்தை  விதிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ‘Bloomberg’ இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், மத்திய வங்கியும் தேவையான சந்தர்ப்பங்களில் சந்தை நடவடிக்கைகளில் தலையிடும் எனத் தெரிவித்துள்ளதாக அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.