2026 August 16, Sunday ⛅ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 28° 🌧️ மட்டக்களப்பு 33°
LIVE
யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!நாட்டின் பல பகுதிகளில் இன்று பல தடவைகள் மழைக்கு வாய்ப்பு!எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!

இலங்கையின் பணவீக்கம் 5.2% ஆக உயரும் என எதிர்வு கூறியுள்ளது

உள்ளூர்April 10, 2026 · 4 months முன்1
இலங்கையின் பணவீக்கம் 5.2% ஆக உயரும் என எதிர்வு கூறியுள்ளது

இலங்கையின் பணவீக்கம் 2025-ஆம் ஆண்டில் காணப்பட்ட -0.5 மட்டத்தில் இருந்து 2026-ஆம் ஆண்டில் 5.2% ஆக அதிகரிக்கக்கூடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) எதிர்வு கூறியுள்ளது. 

அந்த வங்கியினால் இன்று (10) வெளியிடப்பட்ட 2026 ஏப்ரல் மாதத்திற்கான ஆசிய அபிவிருத்தி நோக்கு (Asian Development Outlook – ADO) அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் மோதல்கள் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகரிப்பதானது, பணவீக்க உயர்விற்கு பிரதான காரணியாக அமையும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இது தவிர, புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் குறைவடைதல், வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறைக்கு ஏற்படும் தடைகள் என்பனவும் பணவீக்க அதிகரிப்பிற்குப் பங்களிக்கும் எனவும், இதனால் வீட்டு வருமானம் மற்றும் வெளிவாரியான பாதுகாப்புக் கட்டமைப்புகளில் சுமை ஏற்படும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. 

இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சியில் தடைகள் ஏற்படக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து எட்டப்பட்ட 5.0% என்ற வலுவான வளர்ச்சிக்குப் பிறகு, 2026-ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதாரம் 4.0% என்ற மிதமான வளர்ச்சியை வெளிப்படுத்தும் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.