2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 27° ☀️ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

இலங்கைக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி 26.5% அதிகரிப்பு!

உள்ளூர்April 23, 2026 · 4 months முன்0
இலங்கைக்குக் கிடைக்கும் அந்நியச் செலாவணி 26.5% அதிகரிப்பு!

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்ட பணவனுப்பல்கள், கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 26.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி பணியகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 2.294 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுத் தொழிலாளர் பணவனுப்பல்களாக கிடைத்துள்ளன. இதன்படி, ஜனவரி மாதத்தில் 751 மில்லியன் டொலர்களும், பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர்களும், மார்ச் மாதத்தில் 815 மில்லியன் டொலர்களும் கிடைத்துள்ளன.

2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பெறப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர் பணவனுப்பல்களின் அளவு 1,815 மில்லியன் டொலர்களாகும். அரசாங்கத்தின் நிதி மீதான நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழிலாளர்கள் சட்டபூர்வமான வழிகளைப் பயன்படுத்துவதற்கு பணியகத்தினால் ஊக்குவிக்கப்பட்டமை ஆகியவையே இந்த அதிகரிப்புக்குக் காரணம் என பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை 62,145 நபர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.