2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பல பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு!

உள்ளூர்December 20, 2025 · 8 months முன்0
பல பகுதிகளுக்கு இன்று நீர்வெட்டு!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (20) நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையான 8 மணித்தியாலங்களுக்கு இந்த நீர்விநியோகத் தடை அமுலில் இருக்கும் என அந்த சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு 1 முதல் 15 வரையான பகுதிகளிலும் பத்தரமுல்லை, பெலவத்தை, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துகொட, கோட்டை, இராஜகிரிய, மிரிஹான, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவ, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டி ஒருகொடவத்தை, மஹரகம, பொரலஸ்கமுவ, தெஹிவளை, மொரட்டுவை மற்றும் சொய்சாபுர ஆகிய பகுதிகளில் நீர்விநியோகத் தடை அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது.