2026 August 16, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஷிரந்தி ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை

உள்ளூர்February 3, 2026 · 6 months முன்2
ஷிரந்தி ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ சற்று முன்னர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ஷவை இன்றைய தினம் (03) பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக கடந்த 27ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருகை தருமாறு அவருக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் தம்மால் வருகை தர முடியாது எனவும், அதற்காக 2 வார கால அவகாசம் வழங்குமாறும் ஷிரந்தி ராஜபக்ஷ சட்டத்தரணி ஊடாக பொலிஸாருக்கு அறிவித்திருந்தார்.