2026 October 9, Friday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 27°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நிர்ணய விலையை மீறி சம்பா அரிசி விற்பனை : கொழும்பு 11 வர்த்தகருக்கு 2 இலட்சம் ரூபா அபராதம்!

உள்ளூர்April 29, 2026 · 5 months முன்9
நிர்ணய விலையை மீறி சம்பா அரிசி விற்பனை : கொழும்பு 11 வர்த்தகருக்கு 2 இலட்சம் ரூபா அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு சம்பா அரிசி விற்பனை செய்த கொழும்பு 11 பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு 2 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பு 11, ஐந்தாவது குறுக்குத் தெரு பகுதியில் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த கடை ஒன்றிற்கு எதிராக இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச சில்லறை விலையாக 240 ரூபா நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த கடையில் 5 கிலோகிராம் சம்பா அரிசிப் பொதி 1425 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரு கிலோகிராம் அரிசி 285 ரூபா வீதம் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளமை சுற்றிவளைப்பில் தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட வர்த்தகருக்கு 200,000 ரூபா அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.