2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 29°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சபினா யூசுப் நாடு திரும்பினார்

உள்ளூர்February 4, 2026 · 6 months முன்3
சபினா யூசுப் நாடு திரும்பினார்

அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற 41ஆவது உலக விவாகமான அழகி (Mrs. World 2025/26) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய சபினா யூசுப் (Sabina Yusuf), மூன்றாம் இடத்தைப் (2nd Runner-up) பிடித்து நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

இந்தப் போட்டியில் அவர் மூன்றாம் இடத்தைப் பெற்றதோடு, ‘மிசஸ் போட்டோஜெனிக்’ என்ற சிறப்புப் பட்டத்தையும் வென்றார்.

இப்போட்டி ஜனவரி 22 முதல் ஜனவரி 29 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றது. இதில் உலகின் 60 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

சபினா யூசுப் இன்று காலை கத்தாரிலிருந்து கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை வரவேற்பதற்காகப் போட்டிப் பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க, தேசியப் பயிற்சியாளர் ருக்மல் சேனநாயக்க மற்றும் ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தின் “கோல்ட் ரூட்” முனையத்திற்கு வருகை தந்திருந்தனர்.