2026 August 16, Sunday ⛅ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
எல்ல சுற்றுலாத்துறைக்கு ரூ.1,000 மில்லியனுக்கும் அதிகமான அபிவிருத்தித் திட்டங்கள்!அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு!ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் முழு வீடியோவை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம்

உள்ளூர்March 4, 2026 · 5 months முன்0
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் பெற்றோல் விநியோகம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் சீரான எரிபொருள் விநியோகத்தினை மேற்கொள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் திரு. டி. எஸ். ராஜகருணாவுடன் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், தொலைபேசி ஊடாக நேற்றைய தினம் (03.03.2026) கலந்துரையாடினார்.

இதன் போது, யாழ்ப்பாணத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அனைத்து (36 Ceypetco ) எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் இன்று (04.03.2026) பெற்றோல் விநியோகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் இதன் மூலம் வரிசையினை கட்டுப்படுத்தலாம் எனவும் அரசாங்க அதிபர் யோசனை தெரிவித்திருந்தார்.

அரசாங்க அதிபரின் கோரிக்கைக்கு அமைய, கொலன்னாவையிலிருந்து நேரடியாக எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவரால் தெரிவிக்கப்பட்டது.

இதன் பிரகாரம் நாளை மட்டும் 310,200 லீற்றர் பெற்றோல் கொலன்னாவை மற்றும் காங்கேசன்துறை களஞ்சியங்களிலிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் எனவும், இவ் விநியோகம் தொடர்பில் வட பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாப பிராந்திய முகாமையாளர் திரு சிவகரன் அவர்களுடன் அரசாங்க அதிபர் தொடர்பு கொண்டு, நாளைய விநியோக நடவடிக்கையினை ஒழுங்குபடுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.அதன் பிரகாரம் வட பிராந்திய முகாமையாரால் விநியோகப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இவ் விடயம் தொடர்பில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகரின் கவனத்திற்கும் அரசாங்க அதிபரால் கொண்டுவரப்பட்டது.