2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 25° 🌧️ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை

உள்ளூர்February 11, 2026 · 6 months முன்0
சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை

2025 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் நடத்துவது இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 அத்துடன், பரீட்சைக்கான மாதிரி வினாக்கள்  அடங்கிய வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல், பரீட்சை வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் விளம்பரப்படுத்துதல் அல்லது அவற்றை வைத்திருத்தல் என்பனவும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளன.

 எவரேனும் ஒரு நபரோ அல்லது நிறுவனமோ இந்தச் சட்டங்களை மீறினால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்திற்கோ அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.