2026 October 14, Wednesday 🌧️ கொழும்பு 24° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

உள்ளூர்February 20, 2026 · 8 months முன்2
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

நேற்று மாலை கொழும்பு பாலத்துறை பகுதியில் வைத்து ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபரிடமிருந்து 21,000 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 30 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவின் இரண்டாம் பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரி, உப பொலிஸ் பரிசோதகர் அத்துல பாலசூரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கிராண்ட்பாஸ் பகுதியில் சோதனையிடச் சென்றபோது கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 

போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர் பாலத்துறை பகுதியில் உள்ள வீட்டிற்கு வரவுள்ளதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அதற்கமைய, பதுங்கியிருந்த பொலிஸ் அதிகாரிகள் சந்தேக நபரை மாத்திரை தொகுதியுடன் கைது செய்துள்ளனர். 

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.