2026 October 12, Monday ⛅ கொழும்பு 23° ⛅ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

மே தின பேரணியில் ஒன்றிணைய UNPக்கு உத்தியோகபூர்வ அழைப்பு!

உள்ளூர்April 27, 2026 · 6 months முன்6
மே தின பேரணியில் ஒன்றிணைய UNPக்கு உத்தியோகபூர்வ அழைப்பு!

எதிர்வரும் மே முதலாம் திகதி நடைபெறவுள்ள மே தினப் பேரணியில் ஒன்றிணைந்து கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு மாளிகாவத்தையில் உள்ள பி.டி.சிரிசேன மைதானத்தில் நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

“நாட்டைப் பற்றி சிந்தித்து நாம் அனைவரும் ஒன்றிணைவோம். எமது மே தினப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஏனைய முற்போக்கு சக்திகளுக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்” என அவர் விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.