2026 October 15, Thursday 🌧️ கொழும்பு 28° 🌧️ யாழ்ப்பாணம் 27° 🌧️ கண்டி 27° ⛈️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

அதிக பஸ் கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்

உள்ளூர்April 12, 2026 · 6 months முன்9
அதிக பஸ் கட்டணம் அறவிடப்பட்டால் உடன் அறிவியுங்கள்

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகக் கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து 1955 என்ற இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அந்த ஆணைக்குழுவின் செயற்பாட்டு பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல இதனைத் தெரிவித்துள்ளார். 

பண்டிகைக் காலங்களில் அனுமதிப்பத்திரம் இன்றி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் இருக்கக்கூடும் எனவும், அத்தகைய பேருந்துகள் பயணிகளைச் சுரண்ட வாய்ப்புள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறு அனுமதிப்பத்திரம் இன்றி கொழும்பிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கத் தயாராக இருந்த 7 பேருந்துகளை நேற்று (11) சட்டத்தின் பிடியில் சிக்கவைக்க முடிந்ததாக அவர் கூறினார். 

அந்தப் பேருந்துகள் அந்த இடத்திலேயே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.