MuSHArraf

Aug 19, 2025

உள்ளூர்

சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்படும் மருத மரங்கள்

வவுனியா குளத்தின் ஆற்றுப்பகுதியில் நிற்கும் பழமையான மருத மரங்கள் இனம்தெரியாத குழுக்களால் வெட்டிகடத்தப்படுவதாக கிராமமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்….

வவுனியா குளத்தில் இருந்து  தாண்டிக்குளத்திற்கு செல்லும் ஆற்றின் கரைகளில் பழமையான மருத மரங்கள் அதிகளவில் நிற்கின்றது.

பூந்தோட்டம் வீதியூடாக குறுக்கறுத்துச்செல்லும் அந்த ஆற்றின் கரைகளில் நிற்கும் குறித்த மரங்கள் அண்மையநாட்களாக இனம் தெரியாத நபர்களால் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு கடத்திச்செல்லப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்திற்கு பின்புறமுள்ள பகுதியிலேயே இவ்வாறு மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. சொற்பநாட்களில்7 வரையான மரங்கள் அடியோடு அறுத்துச்செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனவே குறித்த சட்டவிரோத செயற்ப்பாட்டை உரியதிணைக்களங்கள் உடனடியாக தடுத்து நிறுத்தவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp