jino

Aug 15, 2025

உள்ளூர்

விமல் வீரவன்ச CID யில் முன்னிலை !

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இன்று (15) குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) தலைமையகத்திற்கு முன்னிலையாகி உள்ளார்.

வாக்குமூலம் ஒன்றினை அளிப்பதற்காகவே இவர் (CID) யில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்க்குள் நுழைவதற்கு முன் ஊடகங்களிடம் வீரவன்ச கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தான் வெளியிட்ட அறிக்கை குறித்து விசாரணைக்காக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் என தெரிவித்தார்.

குறிப்பாக, கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித்தின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கருத்துக்களை மறுத்து, அவர் குறித்து சர்ச்சைக்குரிய கூற்றுகளை வீரவன்ச முன்வைத்திருந்தார். இதற்கு பதிலளித்த கர்தினால், அவரது கூற்றுகள் "பொய்யானவை மற்றும் அவதூறானவை" எனக் கூறி, அவற்றை திருத்தி மறுப்பு வெளியிடுமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp