jino

Aug 14, 2025

உள்ளூர்

40 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருள் மீட்பு.

தாய்லாந்தில் இருந்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் ரக போதைப்பொருளை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது.

பேலியகொட, நுகே வீதியில் உள்ள துறைமுக கொள்கலன் முற்றத்தில் உள்ள ஒரு கொள்கலனில் குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து 6 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர், பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச தெரிவித்துள்ளார்.

இந்த குஷ் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக வெல்லம்பிட்டியவைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp