jino

Aug 20, 2025

உள்ளூர்

நாட்டில் மகளிர் அமைப்புகளை இனங்காண நடவடிக்கை.

இலங்கையில் தமிழ் மொழி மூலமாக இயங்கிவரும் மகளிர் அமைப்புகளை இனங் கண்டு அவற்றோடு தொடர்புகளை வலுப்படுத்தி தேசிய ரீதியிலான செயல் திட்டங்களை முன்னெடுப்பதற்கு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடவடிக்கை எடுக்க உள்ளது என அதன் தலைவி ரஞ்சனிசுரேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தமிழ்பேசும் சமூகங்கள் வாழும் பகுதிகளில் இயங்கி வரும் மகளிர் அமைப்புகளை நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம்.

இவ்வாறு இயங்கிவரும் அமைப்புகள் தமக்குள் தொடர்பாடல்களை வலுப்படுத்துவதன் மூலம் தேசிய ரீதியிலான கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்வதுடன் ஒருங்கிணைந்த செயற்பணிகளை முன்னெடுக்கலாம் என நம்புகிறோம்.

எனவே இவ்வாறு இயங்கும் அமைப்புகள் எம்மை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், தகவல் தர புதிய அலை கலை வட்ட மகளிர் அணி இல.53.சங்கமித்த மாவத்தை , கொழும்பு-13 என்ற முகவரிக்கு கடிதம் மூலமாகவும் 075 4880172 என்ற வட்சப் இலக்கத்திலும் தொடர்பு கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp