jino

Aug 13, 2025

உள்ளூர்

இலங்கைத் தமிழரசு கட்சி தலைமையில் - மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக நீதி கோரிய கவன ஈர்ப்பு போராட்டம் இன்று (13) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜய பால மட்டக்களப்பிற்கு வருகை தந்ததை அடுத்து குறித்த போராட்டம் இலங்கைத் தமிழரசு கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டது.

- இப் போராட்டத்தின் போது,

இராணுவமே வெளியேறு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டும், முல்லைத்தீவு முத்தையன் கட்டு குளத்தில் 32 வயது கபில் ராஜ் எனும் இளைஞர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், சட்டவிரோத சமூக செயல்பாடுகளுக்கான நீதி கோரியும், செம்மணி, உள்ளிட்ட விடயங்களுக்கு நீதி கோரி கோஷங்களை எழுப்பியவாறு குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், இப் போராட்டத்தில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான, இராசமாணிக்கம் சாணக்கியன் ஞானமுத்து ஸ்ரீ நேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், இரா. சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன், மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் பங்கேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.


Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp