jino

Aug 22, 2025

உள்ளூர்

பிரபாகரன் எங்களின் தெய்வம் - சபையில் அர்சுனா ஆவேசம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எங்களின் தெய்வம் அதை பற்றி கதைக்க சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவுக்கு அறுகதையில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்சுனா ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

- தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, அண்மையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் இருந்த போது யாழில் மாபியா இருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

மாகாண சபை தேர்தல் நெருங்கி வருவதால் யாழ்ப்பாணம் சென்று பிரபாகரன் பற்றி இவர்கள் கதைக்கின்றனர். நீங்கள் பிரபாகரன் பற்றி கதைக்க வேண்டாம். நீங்கள் நாட்டுக்காக உங்களுக்காக போராடிய இராணுவ வீரர்கள் தொடர்பில் பேசுங்கள்.

எங்களுக்கு பிரபாகரன் தெய்வம். அதற்காக நாம் மீண்டும் பிரிவினைவாத போரை ஏற்படுத்த போவதில்லை. நீங்கள் தேர்தல் காலங்களில் பொய் சொன்னீர்கள். நாங்கள் அதை நம்பி வாக்களித்தோம்.

இன்று மாகாண சபை தேர்தல் நெருங்குவதால் பிரபாகரனின் பெயரை குறிப்பிட்டு வாக்குகளை பெற்றுக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

அன்று உகண்டாவில் இருந்த பணம் கொண்டு வருவதாக குறிப்பிட்டனர். இன்று கேட்டாலும் கொண்டு வருவதாகவே குறிப்பிடுகின்றனர். இனியும் இதனை நம்பி நாங்கள் ஏமாற தயாராயில்லை என பாராளுமன்றில் ராமநாதன் அர்சுனா ஆவேசமாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp