jino
Aug 18, 2025
உள்ளூர்
வடக்கு - கிழக்கில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் - எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு.
வடக்கு - கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும, ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
- வவுனியாவில் இன்று அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் பெரும்பாலன கடைகள் பூட்டப்பட்டுளளன. பூட்டப்பட்டுள்ள ஒரு சில கடைகளை சிலர் அச்சுறுத்தி திறக்க வைப்பதையும் காணலாம். சுயமாகவே மக்கள் கடைகளைப பூட்டி தமது எதிர்ப்பைத் தெரிவிக்கின்ற போது அதனை மாற்றியமைக்கும் முகமாக சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன. முஸ்லிம் கடைகள் அனைத்தும் வவுனியா பசார் வீதியில் மூடப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் ஆதரவு கிடைத்துள்ளது.
வவுனியா போன்று யாழ்ப்பாண வாத்தக சங்கமும் செயற்பட்டதால் நகரில் பல கடைகள் திறக்கப்பட்டுள்ளன. எமது கோரிக்கையை ஏற்று வியாபார நிலையங்களை மூடி ஆதரவு தந்தவர்களுக்கு நன்றிகள். பலத்த அழுத்தத்திற்கு மத்தியிலும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
போராட்டங்கள் பல விதம். அந்தந்த காலத்திற்கு தேவையான போராட்டத்தை நாம் தெரிவு செய்து நடத்துவோம். உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள பருந்தித்துறை நகரசபைத் தலைவர், பருத்தித்துறை நகரில் இருக்கும் இராணு முகாம்கள் மூடப்பட வேண்டும். அதற்கு எதிரான போராட்டம் 29 ஆம் திகதி நடத்துவதாக அறிவித்துள்ளார். எங்களது பூரண ஆதரவை அதற்கு நாம் வழங்குவோம்.
மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்பது தான் கோரிக்கையாகவுள்ளது. அனைத்துக் கட்சிகளும் இந்த விடயத்தில் இணைந்து செயற்படுவதாக தான் நான் அறிகிறேன். ஒரு சில அரசியல் கட்சி கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மலையக தமிழ் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளார்கள்.
தமிழ் மக்களின் பகுதியில் இராணுவ முகாம் நிறுவப்பட்டு இருப்பதனால் தான் முத்தையன்கட்டு சம்பவம் இடம்பெற்றது. இது ஒரு அடையாள எதிர்ப்பை செய்துள்ளோம். கிளிநொச்சி நகரத்தில் உள்ள இராணுத்தை அகற்ற அந்தப் பகுதியிலும் பல போராட்டங்கள நடத்துவோம். மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கும் ஆதரவு கொடுப்போம்.
வர்த்தக சங்க தலைவர் கேட்கும் போராட்ட முறைகளுக்கு பதில சொல்ல வேண்டிய அவசியமில்லை. மக்களுடைய அரசியல் தலைவர்கள் நாங்கள் தான். வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி தான் எல்லா மாவட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே நாம் அதற்கேற்ப செயற்படுவோம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All