jino

Aug 14, 2025

உள்ளூர்

பாகிஸ்தானின் 79 வது சுதந்திர தினம் - இலங்கையில் மரியாதை.

பாகிஸ்தானின் 79 வது சுதந்திர தினம் இன்று ஆகஸ்ட் 14 ஆம் திகதி ஆகும். இதனை முன்னிட்டு வியாழக்கிழமை (14) அன்று காலை கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பகீம் அல் அஸீஸ் தலைமையில் பாகிஸ்தான் தேசியக் கொடி ஏற்றி வைக்கும் வைபவம் நடைபெற்றது.

பிரதி சபாநாயகர் டாக்டர் றிஸ்வி சாலி, உயர் நீதிமன்ற நீதியரசர் எம்.ரீ.எம் நவாஸ், முன்னாள் ஆளுநர் அசாத் சாலி முன்னாள் உயர்ஸ்தானிகர் சட்டத்தரணி என்.எம். சஹீட் உட்பட பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்

பாகிஸ்தான் முதல் செயலாளர் பாகிஸ்தான் ஜனாதிபதி . பிரதமர் சுதந்திர செய்திகளை வாசித்தார் அத்துடன் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் ஓய்வு பகீம் அல் அசீஸ் அவர்கள் இலங்கை பாகிஸ்தான் நட்புறவு ராணுவ, கல்வி புலமைப்பரிசில்கள் ஏற்றுமதி, இறக்குமதி துறையில் இலங்கையின் கடந்த 8 தசாப்த காலங்கள் இணைந்து செயற்படுவதாகவும் மற்றும் இந்தியா காஷ்மீர் பிரச்சினை சார்பாக இந்தியா ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் காஷ்மீர் பிரச்சினை நீண்ட காலப் பிரச்சினையாக நிலவி வருவதாகவும் இந்தியா அண்மையில் பாகிஸ்தான் தாக்குதல் மேற்கொண்டதாகவும் உரையாற்றினார்

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp