MuSHArraf

Aug 19, 2025

உள்ளூர்

பொறியில் சிக்கியது சிறுத்தைக் குட்டி

நாயொன்றை வேட்டையாடுவதற்கு வந்த சிறுத்தைக் குட்டியொன்று பொறியில் சிக்கியுள்ளது என நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

 நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போட்றி தோட்டத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியிலேயே சிறுத்தைக் குட்டி இவ்வாறு சிக்கியுள்ளது.

இது தொடர்பில் நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து நல்லத்தண்ணி வனவிலங்கு அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டது.

 பின்னர், நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, பொறியில் சிக்கிய சிறுத்தை குட்டியை மீட்டு விடுவித்துள்ளனர்.

 எனினும், குறித்த பொறியை வைத்த நபரை கைது செய்து ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp