jino

Aug 13, 2025

உள்ளூர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க - மலேசிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான மலேசிய உயர்ஸ்தானிகர் பத்லி ஹிஷாம் பின் ஆதமுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது இரு தரப்பினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

விசேடமாக மலேசியாவின் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கல்வி ஆகிய துறைகள் மற்றும் அண்மைய கால வெற்றிகள் குறித்த தனது அனுபவங்களை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருப்பதாக மலேசிய உயர் ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இவ் சந்திப்பின் போது கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Join the newsletter

Be the first to read our articles.

Home

News

TV

WhatsApp

Home

News

TV

WhatsApp