MuSHArraf
Aug 22, 2025
உள்ளூர்
ரணில் கைது குறித்த தகவல்கள் முன்கூட்டியே எவ்வாறு கசிந்தது
ஒரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்வது தொடர்பில் அரசாங்கம் பின்பற்றிய நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சி விமர்சனங்களை வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரவுப் ஹக்கீம் இது தொடர்பில் நாடாளுமன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் நெருங்கி செயல்படும் யூடியுபர் ஒருவர் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்படுவார் என்பதனை முன் கூட்டியே கூறியது எவ்வாறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவ்வாறு இந்த தகவல்களை அரச உயர் மட்டத்தின் யாராவது கசிய விட்டார்களா என அவர் கேள்வியை எழுப்பி உள்ளார். இந்த விடயம் ஓர் பாரதூரமானது எனவும் இது குறித்து தாங்கள் அச்சப்படுவதாகவும் ரவுப் ஹக்கீம் சுட்டி காட்டியுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் குறித்த பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் மிக நெருக்கமாக பொதுவெளியில் பேசிக்கொண்டிருந்ததை தாம் அவதானித்ததாக தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டின் பிரதமர் என்ற ஓர் பதவியை வகிக்கும் பொதுவெளியில் நடந்து கொள்வதற்கு சில வரைமுறைகள் காணப்படுவதாகவும் அவற்றை மீறி இந்த நபர் குறித்த இடத்தில் நடந்து கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இவ்வாறான பின்னணியில் குறித்த யூடிபருக்கு எவ்வாறு ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்படுவார் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஒருவரை கைது செய்யும் போது சாதாரண ஓரு குற்றவாளியை கைது செய்வது போல செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
பி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நீதவானால் போதிய சாட்சியங்கள் உண்டு எனும் பட்சத்தில் அவரை கைது செய்வது வேறு விடயம் என தெரிவித்துள்ளார். எனினும் குற்றப் புலனாய்வு பிரிவினரே அவரை கைது செய்து இருப்பது விமர்சனத்திற்கு உரியது என தெரிவித்துள்ளார்.

Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All