jino
Aug 14, 2025
உள்ளூர்
ஜனாதிபதி தலைமையில் - 2026 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நேற்று (13) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான 2025 ஆண்டு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் குறித்த மீளாய்வு மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் குறித்த பூர்வாங்க கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
- இக் கலந்துரையாடலில் ஜனாதிபதி கலந்துரையாடியுள்ள விடயங்களாக,
இங்கு, போக்குவரத்துத் துறை தொடர்பில் தனித்தனியாக, நெடுஞ்சாலைகள், அதிவேக நெடுஞ்சாலைகள், கிராமிய வீதிகள் ஆகியவை குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், துறைமுகங்கள் மற்றும் அதன் செயற்பாடுகளுக்கு வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், அந்த ஒதுக்கீடுகள் பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துரையாடியுள்ளார்.
கிராமிய வீதிகளில் பஸ்களை இயக்குவது இலாபகரமானதாக இல்லாவிட்டாலும் அந்த சுமையை அரசாங்கம் ஏற்று மக்களுக்கு அதிகூடிய சேவையை வழங்குவதற்கான திட்டங்களை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதன்போது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தைத் திட்டமிடும்போது, நாட்டை தற்போதைய நிலையிலிருந்து மீட்டெடுப்பதற்கு முக்கியமான துறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் ஆகிய துறைகளை நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையிலான திட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join the newsletter
Be the first to read our articles.
Follow Social Media
Follow us and don’t miss any chance!
முக்கிய செய்திகள்
View All