2026 October 17, Saturday ⛅ கொழும்பு 24° 🌧️ யாழ்ப்பாணம் 27° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 26°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

புத்தாண்டு விடுமுறை முடிவு: இன்று முதல் அரச அலுவலகங்கள் வழமைக்கு!

உள்ளூர்April 15, 2026 · 6 months முன்10
புத்தாண்டு விடுமுறை முடிவு: இன்று முதல் அரச அலுவலகங்கள் வழமைக்கு!


இன்று (15), நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17) அனைத்து அரச நிறுவனங்களும், அலுவலகங்களும் வழமைப்போல் திறந்திருக்கும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.​ 

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, அரச ஊழியர்களுக்கு கடந்த திங்கட்கிழமை மற்றும் நேற்று (14) ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இன்று முதல் அரச நிறுவனங்கள் மற்றும் அலுவலங்களின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது். 

அதேநேரம் சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, இன்று (15) முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதன் போக்குவரத்துப் பணிப்பாளர் ஷெரின் அதுகோரள குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, இன்று ஒரு சாதாரண அலுவலக நாள் என்பதால் அலுவலக ரயில்களை வழக்கம் போல் இயக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

பயணிகளின் தேவைக்கேற்ப உரிய ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.