2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

புதிய தபால் நிலையம் இன்று திறப்பு

உள்ளூர்February 13, 2026 · 6 months முன்3
புதிய தபால் நிலையம் இன்று திறப்பு

தொட்டம்கஸ்லந்த பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய தபால் நிலையம் இன்று முற்பகல் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

நீண்ட வரலாற்றைக் கொண்ட தொட்டம்கஸ்லந்த தபால் நிலையம், இதுவரை காலமும் வாடகை அடிப்படையிலான ஒரு கட்டிடத்திலேயே இயங்கி வந்தது.

இதற்கான நிரந்தரக் கட்டிடத்தை அமைப்பதற்கு 1996 ஆம் ஆண்டிலேயே காணி ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த 30 வருடங்களாக ஆட்சிக்கு வந்த எந்தவொரு அரசாங்கமும் இதற்கான நடைமுறை ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் வழங்கிய வாக்குறுதிக்கமைய, மிகக் குறுகிய காலத்தில் இத்திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

14.71 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டிடத்திற்கு, கடந்த 2025 செப்டம்பர் 07 ஆம் திகதி அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.