2026 August 15, Saturday 🌧️ கொழும்பு 29° ⛅ யாழ்ப்பாணம் 30° 🌧️ கண்டி 27° 🌧️ மட்டக்களப்பு 36°
LIVE
சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த திட்டமா? அதிர்ச்சித் தகவல்!திருகோணமலையில் திறமையான மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை!இந்தியாவுக்குச் சொந்தமானதா? இரணைவில கடற்கரையில் மர்ம படகு!Google Maps-ல் புதிய AI வழிகாட்டி – பயணம் இனி இன்னும் எளிது!தினசரி உடற்பயிற்சி – ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முதல் படி!சருமம் முதல் கூந்தல் வரை – ஓமம் தண்ணீரின் அழகு ரகசியங்கள்!தினசரி புரதத் தேவையை பூர்த்தி செய்ய உதவும் சிறந்த உணவுகள்!பேருந்து நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் சட்ட நடவடிக்கை!

குறிப்பிட்ட 5 இடங்களில் புதிய ஓட்டுநர் உரிம சேவை ஆரம்பம்

உள்ளூர்February 9, 2026 · 6 months முன்1
குறிப்பிட்ட  5  இடங்களில் புதிய ஓட்டுநர் உரிம சேவை ஆரம்பம்

வெளிநாடுகளில் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமங்களின் அடிப்படையில், தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் சேவையானது கடந்த 2ஆம் திகதி முதல் விரிவாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இதுவரை வேரஹெர மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அலுவலகங்களில் மாத்திரம் வழங்கப்பட்டு வந்த இந்தச் சேவையை, இனிவரும் காலங்களில் குருணாகல், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, அனுராதபுரம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலக அலுவலகங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.