2026 October 11, Sunday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 31° 🌧️ கண்டி 23° 🌧️ மட்டக்களப்பு 28°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: விசாரணையை ஆரம்பிக்கிறது மனித உரிமைகள் ஆணைக்குழு!

உள்ளூர்July 7, 2026 · 3 months முன்11
நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்: விசாரணையை ஆரம்பிக்கிறது மனித உரிமைகள் ஆணைக்குழு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட மற்றும் முழுமையான விசாரணை ஒன்றை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்த விடயத்தை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த விசாரணைக்காக நேற்று நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அதிகாரிகள் குழுவொன்று அனுப்பப்பட்ட போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு நேரில் சென்று குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளார்.