2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

நயினாதீவு விகாராதிபதியுடன் யாழ்.மாவட்ட செயலாளர் சந்திப்பு

உள்ளூர்January 4, 2026 · 7 months முன்0
நயினாதீவு விகாராதிபதியுடன் யாழ்.மாவட்ட செயலாளர் சந்திப்பு

நயினாதீவு விகாராதிபதி நவதகல பதும கிர்த்தி திஸ்ஸ மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபனுக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது தையிட்டி விகாரை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட செயலாளரால் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக விகாராதிபதி கேட்டறிந்து கொண்டார்.

மேலும் விகாராதிபதி தமது பக்க நிலைப்பாடுகளையும் மாவட்ட செயலாளரிடம் தெரிவித்தார்.

தையிட்டி விகாரை தற்போது அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழ விகாரைக்கு என அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தனியாருக்கு சொந்தமானவை எனவும், அவற்றில் தற்போது விகாரை அமைந்துள்ள சுமார் 1.2 ஏக்கர் காணியை தவிர ஏனைய காணிகளை காணி உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டும் என்றும், தற்போதுள்ள தையிட்டி விகாரையை தன்னிடம் பொறுப்பளித்தால், விகாரை அமைந்து 1.2 ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களுக்கு தனது பொறுப்பின் கீழ் உள்ள திஸ்ஸ விகாரை காணியில் 1.2 ஏக்கர் காணியை மாற்றீடாக வழங்க தயார் என நயினாதீவு விகாராதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.