2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 26° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

இளம்பெண் படுகொலை : நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

உள்ளூர்March 27, 2026 · 5 months முன்1
இளம்பெண் படுகொலை : நீதி கோரி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி

மட்டக்களப்பு, தாந்தாமலை பகுதியில் இளம்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி, நாளை மட்டக்களப்பில் பாரிய கவனயீர்ப்புப் பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது . இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில், பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து காயமடைந்த நிலையில் ஒரு பெண்ணும், சடலமாக இன்னொரு பெண்ணும் கண்டெடுக்கப்பட்டனர். சடலமாக மீட்கப்பட்டவர், கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த மண்முனை நாற்பதாம் கிராமத்தைச் சேர்ந்த நளாயினி என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை இன்று நேரில் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், அவர்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்தார்.

ஊடகங்களிடம் பேசிய சாணக்கியன் இராசமாணிக்கம், காவல்துறையினரின் மெத்தனப் போக்கே இவ்வாறான குற்றங்கள் அதிகரிக்கக் காரணம் எனச் சாடினார். இளம்பெண் காணாமல் போனதாக முறைப்பாடு அளிக்கப்பட்டும், விசாரணைகளை ஆரம்பிக்க காவல்துறை தாமதம் காட்டியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.