2026 August 17, Monday 🌧️ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 21° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

யாழ் மாநகர சபையில் கிழித்தெறியப்பட்ட பிரேரணை

உள்ளூர்February 13, 2026 · 6 months முன்2
யாழ் மாநகர சபையில் கிழித்தெறியப்பட்ட பிரேரணை

பழக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யாது அசமந்தமாக செயற்பட்ட யாழ் மாநகரின் முதல்வரது செயலைக் கண்டித்த பிரேரணையை கிழித்தெறித்த ஈ.பி.டி.பியியின் உறுப்பினர்கள் சபையின் அமர்விலிருந்தும், வெளிநடப்புச் செய்தனர்.

யாழ் மாநகரின் உறுப்பினர் தர்சானந்தின் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டுவரப்பட்ட பிரேரணையை எதிர்த்து யாழ் மத்திய பேருந்து நிலைய சூழலில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் மாநகர சபை முன்பாக போராட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.

இவ்விடயம் குறித்து இன்றைய சபை அமர்வில் கருத்தை முன்வைத்து, உரிய பொறிமுறையின்றி கொண்டுவரப்பட்ட பிரேரணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செயற்படுத்தும் சந்தர்ப்பத்தில் உரிய பொறிமுறை வேண்டும் என்றும் வலியுறுத்தியதுடன் அதற்கான தீர்வை உடன் வழங்க வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி யினர் வலியுறுத்தினர்.

ஆனால் முதல்வர் அவ்விடையத்தை அலட்சியப்போக்குடன் கையாண்டு நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சபையை முன்னெடுத்தமையால் ஈ.பி.டி.பி.யின் உறுப்பினர்கள் குறித்த பிரேரணையை கிழித்தெறிந்து சபையை விட்டு வெளியேறினர்.