2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

ஜெர்மனி மேயருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!

உள்ளூர்February 28, 2026 · 6 months முன்1
ஜெர்மனி மேயருடன் அமைச்சர் விஜித ஹேரத் சந்திப்பு!

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் விஜித ஹேரத், பிரேமன் (Bremen) நகர மேயர் கலாநிதி ஆண்ட்ரியாஸ் போவன்ஷுல்ட் (Dr. Andreas Bovenschulte) அவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஜெர்மனிக்குச் சென்றிருந்த அமைச்சர் விஜித ஹேரத்தை, பிரேமன் நகர மேயர் மிகவும் உற்சாகத்துடன் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஜெர்மனியின் பிரேமன் நகரம் மோட்டார் வாகன உற்பத்தி, வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலி (Logistics) உள்ளிட்ட தொழில்துறைகளின் முக்கிய மையமாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் அதிகரித்து வரும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவதானம் செலுத்துமாறு பிரேமன் நகர மேயரிடம் அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை விடுத்தார்.

ஜெர்மனியர்களிடையே இலங்கை ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக விளங்குவதால், அதனை மேலும் ஊக்குவிப்பதற்கான சூழலை உருவாக்க பிரேமன் நகர மேயர் தனது உடன்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க ஜெர்மனி தயாராக இருப்பதாக இந்தச் சந்திப்பின் போது மேயர் உறுதிப்படத் தெரிவித்தார்.