2026 August 16, Sunday ⛅ கொழும்பு 28° ⛅ யாழ்ப்பாணம் 29° ⛅ கண்டி 27° ⛅ மட்டக்களப்பு 31°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மத்திய கிழக்கு விவகாரம் : இலங்கை நடுநிலைமையில் மாற்றம் இல்லை

உள்ளூர்March 20, 2026 · 5 months முன்2
மத்திய கிழக்கு விவகாரம் : இலங்கை நடுநிலைமையில் மாற்றம் இல்லை

மத்திய கிழக்கு விவகாரத்தில் இலங்கையின் நடுநிலைமையில் மாற்றமில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றம் இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடியது. இதன் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள மத்திய கிழக்கு போர் விவகாரத்தில், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும் நடுநிலைத் தன்மை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி “இந்த விவகாரத்தில் எம்முடைய நாட்டின் நிலைப்பாடு எப்போதும் நடுநிலை வகிப்பதாகும். இந்த நடுநிலைத் தன்மையைப் பாதுகாப்பதே எமது நாட்டின் சர்வதேச கௌரவத்தை உறுதிப்படுத்தும்” எனத் தெரிவித்தார்.

எந்தவொரு இக்கட்டான சந்தர்ப்பத்திலும் அல்லது சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும், இலங்கை தனது மத்தியஸ்த நிலையை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.