2026 October 11, Sunday ⛅ கண்டி 22°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய நிதி மோசடி : பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு!

உள்ளூர்April 24, 2026 · 6 months முன்3
ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் பாரிய நிதி மோசடி : பொதுமக்களுக்கு  அவசர அறிவிப்பு!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பெயர் மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெற்று நிதி மோசடிகளில் ஈடுபடும் கும்பல் குறித்து அந்தத் திணைக்களம் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாகத் திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அவசர அழைப்பு இலக்கத்தை ஒத்த எண்களைப் பயன்படுத்தி இம்மோசடி அழைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பாக +94115226126, +0115226126 , 0771167739, 0742756098 ஆகிய இலக்கங்கள் குறித்து பொதுமக்கள் அதீத அவதானத்துடன் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.