2026 August 17, Monday 🌧️ கொழும்பு 26° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

மாகந்துரே மதுஷ் ப#கொலை சம்பவம் : CID விசாரணைகள் ஆரம்பம்

உள்ளூர்March 11, 2026 · 5 months முன்1
மாகந்துரே மதுஷ் ப#கொலை சம்பவம் : CID விசாரணைகள் ஆரம்பம்

கடந்த 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி, மாளிகாவத்தை பகுதியில் வைத்து பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் இருந்தபோது இனந்தெரியாத இருவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முறையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, மதுஷ் கொல்லப்பட்ட நாளன்று அவரை மாளிகாவத்தை பகுதிக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் அதிகாரிகளிடம் எதிர்வரும் நாட்களில் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளதாக CID தெரிவித்துள்ளது.

குறித்த படுகொலை தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு மாகந்துரே மதுஷின் சகோதரர் ஒருவர் பொதுப்பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இக்கோரிக்கையை அடுத்து, பொலிஸ் மா அதிபரினால் இந்த விவகாரம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) ஒப்படைக்கப்பட்டது.