2026 October 9, Friday ⛅ கொழும்பு 25° ⛅ யாழ்ப்பாணம் 26° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 25°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் சிகரெட் கடத்தல் முறியடிப்பு!

உள்ளூர்June 29, 2026 · 3 months முன்9
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெரும் சிகரெட் கடத்தல் முறியடிப்பு!

42 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 

சம்பந்தப்பட்ட சந்தேக நபர் இன்று (29) அதிகாலை சீனாவின் குன்மிங் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே கைதானதாக ‘அத தெரண’ விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். 

அவர் அந்த சிகரெட்டுக்களை பச்சை வழி ஊடாக வெளியே கொண்டு செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அந்தப் பெண் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,000 சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடைய சீன நாட்டு பெண் தொழிலதிபர் எனத் தெரியவந்துள்ளது. 

சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.