2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கணக்காய்வாளர் நாயகம் பதவி : மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

உள்ளூர்January 27, 2026 · 7 months முன்2
கணக்காய்வாளர் நாயகம் பதவி : மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

கடந்த 8 மாத காலப்பகுதியில் நிரந்தர கணக்காய்வாளர் நாயகம் ஒருவரை நியமிக்க முடியாமை மற்றும் பதில் கணக்காய்வாளர் நாயகத்தின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னரும் இதுவரை எவரும் நியமிக்கப்படாமை காரணமாக, பல்வேறு தரப்பினர் அரச நிதி மேலாண்மை குறித்து சர்ச்சைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூகமயப்படுத்த சில தரப்பினர் இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி வருவதாக மகாநாயக்க தேரர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும், அரச நிதி மேலாண்மையின் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் பாரிய பொறுப்பு வாய்ந்த கணக்காய்வாளர் நாயகம் போன்ற பதவிக்கு, கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்திற்கு வெளியேயுள்ள ஒரு அதிகாரியை நியமிப்பது பொருத்தமற்றது எனவும் அவர்கள் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். 

எனவே, கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் மிக்க சிரேஷ்ட அதிகாரியான தர்மபால கம்மன்பிலவை கணக்காய்வாளர் நாயகப் பதவிக்கு நியமிப்பதே பொருத்தமானது எனவும், அது ஜனாதிபதி முன்னெடுக்கும் நாட்டை வளப்படுத்தும் செயற்திட்டத்திற்கு வலுவூட்டும் எனவும் மகாநாயக்க தேரர்கள் தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளனர்.