2026 October 17, Saturday ⛅ கொழும்பு 29° 🌧️ யாழ்ப்பாணம் 29° 🌧️ கண்டி 24° 🌧️ மட்டக்களப்பு 30°
LIVE
நாமல் இன்றும் நீதிமன்றில் ஆஜர் !சவாலுக்கு மத்தியிலும்பொருளாதார ஸ்த்திரம் இலங்கைக்கு ஐ.நா வாழ்த்து !ஈராக்கில் இருந்து முழுமையாக வௌியேறும் அமெரிக்க படைகள் !தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா பிணையில் விடுதலை.கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ளார்.ரூ.21 மில்லியன் நிதி மோசடி வழக்கிலிருந்து உதய கம்மன்பில விடுதலை.பேரனர்த்தங்களின்போதான பதிலளிப்பு மற்றும் மனிதாபிமான உதவிகளில் ஒத்துழைப்பை அதிகரிக்கத் திட்டம்.ஈரான் சரணடைந்தால் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் – ட்ரம்ப்.

வர்த்தகர்களுக்கு எதிராக தொடரும் சட்ட நடவடிக்கை

உள்ளூர்April 16, 2026 · 6 months முன்4
வர்த்தகர்களுக்கு எதிராக தொடரும் சட்ட நடவடிக்கை

ஏப்ரல் முதலாம் திகதி முதல் 12ம் திகதி  வரை மேற்கொள்ளப்பட்ட சுமார் 2,000 சோதனைகளின் மூலம் 400-க்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது 12,000-க்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

சுகாதாரமற்ற முறையில் உணவுகளை விற்பனை செய்தமை மற்றும் காலாவதியான உணவுகளை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சோதனைகள் எதிர்வரும் வெசாக் மற்றும் பொசன் பண்டிகைகளை முன்னிட்டும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்