2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 23° ⛅ மட்டக்களப்பு 30°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கடந்த ஆண்டில் அதிகளவான போதைப்பொருள் பறிமுதல்!

உள்ளூர்January 22, 2026 · 7 months முன்3
கடந்த ஆண்டில் அதிகளவான போதைப்பொருள் பறிமுதல்!

பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் அதிகளவான போதைப்பொருள் தொகையை கைப்பற்ற முடிந்தது 2025ஆம் ஆண்டிலேயே என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ.வுட்லர் தெரிவித்துள்ளார்.

“நாடே ஒன்றிணைவோம்” தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

2024ஆம் ஆண்டில் ஹெரோயின், கஞ்சா, ஐஸ், ஹஷிஸ் மற்றும் கொக்கேய்ன் உள்ளிட்ட 10,871 கிலோகிராம் போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

ஆனால்இ இந்த அளவு 2025ஆம் ஆண்டில் 23,692 கிலோகிராம் 307 கிராமாக அதிகரித்துள்ளதாகவும், இது (2024 உடன் ஒப்பிடுகையில்) சுமார் மூன்று மடங்கு அதிகரிப்பு எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.