2026 August 16, Sunday ⛅ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ⛅ மட்டக்களப்பு 28°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு காணி மாற்றம்!

உள்ளூர்May 18, 2026 · 3 months முன்2
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு காணி மாற்றம்!

தொம்பே பிரதேச செயலகத்தின் பொறுப்பிலுள்ள மல்வானை பகுதியில் அமைந்துள்ள காணி மற்றும் வீட்டை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதற்கு பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. 

இன்று (18) பிரதமருடன் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அதன் இணைப்பாளர் சசிந்து பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், நடைபெற்ற கலந்துரையாடலில் இக்காணியை கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு மாற்றுவதற்குத் தீர்மானிக்கப்பட்டதால், இந்த நேரத்தில் அந்த வளாகத்தில் இருந்து வெளியேறி செல்வதற்குத் தாங்கள் உள்ளிட்ட குழுவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

மல்வானை காணியை வரும் நாட்களில் கூடிய விரைவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைப்பதாகப் பிரதமர் உறுதியளித்துள்ளார். 

நாங்கள் கோரிய விடயத்திற்கு அரசாங்கத் தரப்பிலிருந்து ஒரு பதில் கிடைத்துள்ளது. 

அந்தப் பதிலைத் தொடர்ந்து, இந்த நேரத்தில் மல்வானை காணியில் இருந்து வெளியேற நாங்கள் தீர்மானித்துள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.