2026 August 17, Monday 🌧️ கொழும்பு 27° ⛅ யாழ்ப்பாணம் 28° ⛅ கண்டி 22° ☀️ மட்டக்களப்பு 27°
LIVE
கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் கைது!நிதி முறைகேடுகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பயனாளிகளுக்கு கோரிக்கை!யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியால் புதிய வீடு கையளிப்பு!நாடு முழுவதும் 96 பகுதிகள் அதிஅபாய டெங்கு வலயங்களாக அடையாளம்!அவுஸ்திரேலியாவை 9 விக்கெட்டுகளால் வீழ்த்தி பங்களாதேஷ் வரலாற்று வெற்றி!நாட்டின் பெரிய வெங்காயத் தேவையில் 50% உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்!கடுவெல வழியாக பயணிப்போருக்கு பொலிஸாரின் முக்கிய அறிவிப்பு!28 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஜேர்மனியின் ஜூலியன் வெபர்!

கொட்டா வீதி புகையிரத கடவை புனரமைப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

உள்ளூர்May 22, 2026 · 3 months முன்3
கொட்டா வீதி புகையிரத கடவை புனரமைப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

கொட்டா வீதி புகையிரத கடவையில் மேற்கொள்ளப்படவிருந்த அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் சீரற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. 

களனிவௌி பாதையின் பேஸ்லைன் மற்றும் நாரஹேன்பிட்டி புகையிரத நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த புகையிரத கடவையின் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் நாளை (23) காலை 09.30 மணி முதல் மறுநாள் (24) காலை 07.30 மணி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. 

இருப்பினும், குறித்த புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் தினங்கள் குறித்து எதிர்காலத்தில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.